ராகி கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 2 கப்
2. அரிசி மாவு - 1 கப்
3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
4. வெங்காயம் - 1 எண்ணம்
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு கடாயில் ராகி மாவு, அரிசி மாவு ஆகியவற்றைப் போட்டு சூடுபட வறுத்து ஆற வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் தண்ணீர் சேர்த்துக் கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் மாவு சேர்த்துக் கட்டிப் பிடித்து விடாமல் கிளறவும்.
5. மாவு கெட்டியானதும் இறக்கி ஆற வைக்கவும்.
6. அரிசி மாவுக் கலவையை சிறிது சிறிதாக எடுத்து உருட்டி மெல்லியதாகத் தட்டி வைக்கவும்.
7. அவையனைத்தையும் இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.