அவல் கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 2 கப்
2. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
3. பச்சைமிளகாய் - 6 எண்ணம்
4. இஞ்சி - சிறிது
5. கறிவேப்பிலை - சிறிது
6. மல்லித்தழை - சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
2. அவலை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துச் சில நிமிடம் ஊற விடவும்.
3. அவலை உதிர்த்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
4. மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
5. இட்லித் தட்டில் வைத்து குக்கரில் (வெயிட் போடாமல்) ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.