கம்பு கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கம்பு மாவு - 1 கப்
2. வெல்லம் – 150 கிராம்
3. முந்திரிப்பருப்பு – 6 எண்ணம்
4. தேங்காய்த் துண்டு (தேங்காய் பற்கள்) - 10 எண்ணம்
5. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் வெல்லம் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
2. வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, தேங்காய்த் துண்டு, முந்திரிப்பருப்பு போட்டுக் கிளறவும்.
4. பின்னர் அதனுடன் வெல்லம் கலந்த தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகப் பிசைந்து கொள்ளவும். (கையில் ஒட்டாத அளவிற்குப் பிசைந்து கொள்ளவும்)
5. பின்னர் அதனைக் கொழுக்கட்டை உருண்டைகளாகப் பிடித்து, அவற்றை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து, எடுத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.