அரிசி உப்புமா கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி -1 கப்
2. தேங்காய் - 1/4 மூடி
3. கடுகு -1 தேக்கரண்டி
4. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
5. வெள்ளை உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
6. மிளகாய்வற்றல் - 2 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிது
8. காயம் - சிறிதளவு
9. எண்ணெய் -1 தேக்கரண்டி
செய்முறை:
1. பச்சரிசியைச் சுடுதண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
3. அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்துச் சொரசொரப்பாக அரைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் போட்டுத் தாளிசம் செய்யவும்.
5. தாளிசத்துடன் அரைத்த அரிசி மாவைச் சேர்க்கவும்.
6. அதனுடன் பாதி தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.
7. கொதிக்கும் நீரில் வதக்கிய அரிசிக்கலவையைச் சேர்த்து உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளறி இறக்கவும்.
8. உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகளாக உருட்டவும்.
9. இட்லிக் குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.