பலாப்பழக் கொழுக்கட்டை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 300 கிராம்
2. தேங்காய் - ஒரு மூடி
3. வெல்லம் - 200 கிராம்
4. பலாச்சுளை - 10 எண்ணம்
5. ஏலக்காய் - 5 எண்ணம்
6. நெய் - 3 தேக்கரண்டி
7. உப்பு - சிறிது.
செய்முறை:
1. பச்சரிசியைக் கழுவிக் களைந்து உலர்த்தி ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
2. பொடித்த ரவையை இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
3. தேங்காயைத் துருவி வைக்கவும்.
4. பலாச்சுளையைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர்விட்டுச் சிறிது நேரம் கொதித்ததும், அதில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும்.
6. வெல்லம் கரைந்ததும், தேங்காய்த் துருவல், பலாச்சுளைத் துண்டுகள், ஏலக்காய், நெய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
7. நன்றாகக் கொதிக்கும் போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும்.
8. தண்ணீர் வற்றிக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
9. அதன் பிறகு எலுமிச்சம் பழ அளவு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
10. பிடித்து வைத்த கொழுக்கட்டையினை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.