இடியாப்பக் கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. இடியாப்ப மாவு - 1 கப்
2. நாட்டுச் சர்க்கரை - 4 கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 1/2 மூடி
4. ஏலக்காய்ட் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
2. பிறகு தேங்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து வதக்கவும், பின்னர் அதில் ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, அதன் பிறகு இடியாப்ப மாவில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளவும்.
4. இடியாப்பம் பிழியும் பதம் வரும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.
5. இடியாப்ப மாவை வாழை இலையில் சிறிது சிறிதாக இடியாப்பமாகப் பிழியவும். அதன் மேல் பூர்ணம் வைக்கவும்.
6. பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் அவித்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.