மாம்பழ பூரணக் கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1 கப்
2. மாம்பழ விழுது (அரைத்தது) - 3/4 கப் (கெட்டியாக இருக்க வேண்டும்)
3. சர்க்கரை - 1/4 கப்
4. நெய் - 1 தேக்கரண்டி
5. ஏலக்காய்த்தூள் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மாம்பழ விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
3. பிறகு அதில் சூடான தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிருதுவான பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
4. பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து, தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
5. அதன் பிறகு, அதில் தயாரித்து வைத்திருக்கும் மாம்பழப் பூரணத்தை வைத்து நன்றாக மூடவும்.
6. இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தட்டுகளில் கொழுக்கட்டைகளை வைத்து, மிதமான நெருப்பில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.