கவுனி அரிசிக் கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கவுனி அரிசி மாவு - 2 கப்
2. வெல்லம் - 1 கப்
3. கருப்பு எள் - 3 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் - 1 கப்
5. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. வெல்லத்தைப் பாகாக் காய்ச்சவும். பாகில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
2. அதனுடன் கவுனி அரிசி மாவைச் சேர்த்துக் கரண்டியால் கிளறவும்.
3. அதனுடன் வறுத்த எள்ளு சேர்த்து, தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறவும்.
4. மாவை சூடு ஆறிய பின் கையில் எண்ணை தேய்த்துக் கொண்டு உருண்டையாக, பிடிகொழுக்கட்டையாகப் பிடித்து வைக்கவும்.
5. இட்லிப் பாத்திரத்தில், தட்டில் ஒவ்வொரு கொழுக்கட்டையாக அடுக்கி, 20 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.