ராகி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 1 கப்
2. பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
4. வெல்லம் - 1 1/2 கப்
5. ஏலக்காய்த்தூள் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, வேக வைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. அத்துடன் சூடான வெல்லப்பாகைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
4. பிசைந்த மாவைச் சிறு உருண்டையாக எடுத்து, அதனை நீளவாக்கில் உருட்டி உள்ளங்கையால் அழுத்திக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
5. இட்லிப் பாத்திரத்தில், உருட்டி வைத்த கொழுக்கட்டைகளை வைத்து மிதமான நெருப்பில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.