காரக் கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 1 கப்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
4. இஞ்சி - சிறிய துண்டு
5. கறிவேப்பிலை - சிறிதளவு
6. மல்லித்தழை - சிறிதளவு
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
9. தேங்காய்த் துருவல் - 1/2 மூடி
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
12. உளுந்து - 1 தேக்கரண்டி
13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
3. அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.
5. அதனுடன் அரைத்த மாவைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை விட்டு இறக்கவும்.
6. மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் அடுக்கி வைக்கவும்.
7. இட்லி பாத்திரத்தில் வைத்துக் கொழுக்கட்டைகளை 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.