பொரிகடலைப் பூரணக் கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1 கப்
2. தேங்காய் - 1/2 கப்
3. போரிகடலை - 1/2 கப்
4. வெல்லம் - 1 கப்
5. ஏலக்காய் - 2 எண்ணம்
6. நெய் - 2 கரண்டி
செய்முறை:
1. அரிசி மாவைத் தண்ணீரில் நன்றாகக் கரைத்து உப்பு, நெய் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி எடுத்து வைக்கவும்.
2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொரிகடலை மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து சூடு படுத்தி, அரைத்து வைத்திருக்கும் கலவையுடன் சேர்த்து நன்றாகச் சுருளக் கிளறி எடுத்து வைக்கவும்.
4. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதனைத் தட்டி அதனுள் பொரிகடலைப் பூரணத்தை வைத்து மடக்கி வைக்கவும்.
5. இட்லிப் பாத்திரத்தில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.