சிவப்பரிசி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அரிசி மாவு – 1 1/2 கப்
2. வெல்லம் – 1 கப்
3. தேங்காய் துருவல் – 1 கப்
4. ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
5. நெய் – 1 தேக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதனைக் கொதிக்க வைத்து இறக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, அதில் கொதிக்கும் நீரைச் சேர்த்து, மென்மையாகப் பிசைந்து மாவைத் தனியாக வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, அதனுடன் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
4. தனி பாத்திரத்தில் வெல்லப் பாகை வடிகட்டி 3/4 பங்கு குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
5. பிறகு, அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, நன்கு கலந்து தண்ணீர் குறையும் வரை வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
6. நெய் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்கு கலந்து பூரணமாகத் தனியாக வைக்கவும்.
7. மாவை 15 அல்லது அதற்கு மேற்பட்ட உருண்டைகளாகப் பிரித்து, பூரணத்தை அதே அளவுப் பாகமாகப் பிரிக்கவும்.
8. ஒரு உருண்டையை எடுத்து வட்டமாகத் தட்டி, அதனுள் பூரணத்தை நிரப்பி வைக்கவும்.
9. இட்லிப் பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்துப் பின்னர் எடுத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.