உளுந்து காரக் கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உளுத்தம் பருப்பு - 1 கப்
2. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. பெருங்காயம் - சிறிது
5. உப்பு - தேவையான அளவு
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிது
செய்முறை:
1. உளுந்து நன்கு கழுவி முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய உளுந்தை பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வைக்கவும்.
4. வேக வைத்ததை சிறிது ஆறவிட்டு, மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக் கொள்ளவும்.
5. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து உதிர்த்து வைத்துள்ள பூரணத்தைப் போட்டு நன்கு கிளறவும்.
6. உப்புமாவைப் போல உதிரி உதிரியாக வந்தவுடன் இறக்கவும்.
7. கொழுக்கட்டை மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைக்கவும்.
8. தாளித்த உளுந்து பூரணத்தோடு கொட்டி கிளறுங்கள். உளுந்து காரக்கொழுக்கட்டை தயாராகி விடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.