ரவை கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கப்
2. துவரம் பருப்பு - 1/2 கப்
3. உளுந்து - 1/2 கப்
4. மிளகாய் - 6 எண்ணம்
5. பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. நெய் - 1 கரண்டி
9. கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பருப்பு வகைகளை சேர்த்து 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. மிளகாய், பெருங்காயதூள் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
3. அதனுடன் இரண்டரை கப் தண்ணீர், உப்பு, தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாக ஊற்றி, காயவைத்து கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, அதில் கரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்க்கவும்.
5. பருப்புக் கலவை சற்று தளதளவென்று கெட்டியாகக் கொதிக்கும் போது, ஒரு கையால் அரிசி ரவையை சேர்த்துக் கொண்டே, இன்னொரு கையால் கட்டியில்லாமல் கிளறவும்.
6. கலவையில் தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில், 15 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.
7. சற்று ஆறியதும் சிறிது சிறிதாக மாவை எடுத்து கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
8. பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வைத்துப் பத்து நிமிடம் வரை வேக வைக்கவும்.
9. மாவு வெந்து கொழுக்கட்டை தயாரானதும் கீழே இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.