கோதுமை கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 2 கப்
2. தேங்காய்த் துருவல் - 2 கப்
3. வெல்லம் - 1 கப்
4. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
5. ஏலக்காய் - 3 எண்ணம்
6. உலர் திராட்சை - 25 கிராம்
7. நெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, உருக்கிய நெய் கலந்து வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி பூரி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
2. வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கெட்டியாகப் பாகு காய்ச்சவும்.
3. வெல்லப் பாகில் தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய், திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கலந்து கிளறவும்.
4. பூரணம் கெட்டியாக இருக்கும் படி வைக்கவும்.
5. மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து அதன் நடுவில் இந்த பூரணத்தை வைத்து மூடவும்.
6. எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாகச் செய்துகொள்ளவும்.
7. இட்லி தட்டில் வாழை இலையை சிறிய தூண்டுகளாக நறுக்கி வைத்து, அதில் நெய் தடவி அதன் மேல் இந்தக் கொழுக்கட்டைகளை வைத்து, இலையை மூடி இட்லிப் பானையில் 30 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.