வாழைப்பழக் கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பழம் (நன்கு கனிந்தது) - 2 எண்ணம்
2. இடியாப்ப மாவு - 1 கிண்ணம்
3. அரிசி மாவு - 1/2 கிண்ணம்
4. சர்க்கரை - 1/2 கிண்ணம்
5. நெய் - தேவையான அளவு
6. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 3/4 கிண்ணம் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
2. பின் அதில் மசித்த இரண்டு வாழைப்பழத்தை ஏலக்காய் தூள் சேர்த்து, நன்றாகக் கிளறி விடவும்.
3. அரிசி மாவு சேர்த்துக் கிளறி ஆற வைக்கவும்.
4. ஆறிய மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து கொள்ளவும்.
5. அதனை 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.