பீட்ரூட் கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் துருவல் - 1 கிண்ணம்
2. அரிசி மாவு – 1 கிண்ணம்
3. தேங்காய்த் துருவல் – 1/4 கிண்ணம்
4. பொடித்த வெல்லம் – 3/4 கிண்ணம்
5. ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
6. நெய் – 4 தேக்கரண்டி
7. முந்திரிப்பருப்பு – 10 எண்ணம்
செய்முறை:
1. அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும்.
2. கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்துச் சூடாக்கி, வெல்லத்தைக் கரையவிட்டு வடிகட்டவும்.
3. அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு நெய் விட்டுக் கலந்து வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டுக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
4. கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
5. மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.