சேமியா கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சேமியா – 200 கிராம்
2. தேங்காய் – 1 எண்ணம்
3. காய்ச்சிய பால் – 2 கிண்ணம்
4. அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி
5. வெங்காயம் (நறுக்கியது) – 1 கிண்ணம்
6. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. எள் – 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை – சிறிது
12. எண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. தேங்காயைத் துருவி வைக்கவும். மிளகாயை நறுக்கி வைக்கவும்.
2. சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
4. தேங்காய் துருவல் சேர்த்து, நெருப்பை அணைத்துவிட்டுக் கலக்கவும்.
5. பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகியவற்றையும் அதில் கலக்கவும்.
6. கையினால் நன்கு மசித்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.