கம்பு இனிப்பு கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு – 2 தேக்கரண்டி
2. கம்பு மாவு – 1 கிண்ணம்
3. தேங்காய்த் துருவல் – 1/2 கிண்ணம்
4. ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
5. பொடித்த வெல்லம் – 3/4 கிண்ணம்
செய்முறை:
1. அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும்.
2. வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
3. மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
4. அதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போலப் பிசையவும்.
5. கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.