ஜவ்வரிசி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி – 1 கிண்ணம்
2. மைதா – 2 தேக்கரண்டி
3. இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
4. கறிவேப்பிலை - சிறிது
5. மல்லித்தழை – சிறிது
6. மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் – 4 தேக்கரண்டி
8. எண்ணெய் – தேவையான அளவு
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்.
2. ஜவ்வரிசி நன்கு ஊறியதும் அழுத்திப் பிசையவும்.
3. அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டுக் கிளறவும்.
4. மிளகாய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாகத் தயார் செய்யவும்.
5. அந்த உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.