ராகி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 1 கோப்பை
2. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
7. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
8. வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
5. அதில் ராகி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
6. அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
7. அதன் பின் சிறிது தண்ணீர் தெளித்து, நன்கு கலந்து இறக்கவும்.
8. ராகி கொழுக்கட்டைக் கலவை சூடு ஆறியவுடன் கொஞ்சமாக ராகி கலவையை எடுத்து, கையால் அழுத்தி பிடித்து இட்லிச் சட்டியில் வைத்து, ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.