சிவப்பு அவல் கார கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அவல் - 1 கோப்பை
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. இஞ்சி - சிறிய துண்டு
9. தேங்காய்த் துருவல் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணை - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சிவப்பு அவலைச் சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லிததழை, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
5. தேங்காயத் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
6. அவலை நன்கு வடித்து எடுத்து, தாளிப்பு மற்றும் உப்பு சேர்த்து வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
7. அவலைக் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லிச் சட்டியில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.