எள்ளுப் பிடி கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 200 கிராம்
2. அச்சு வெல்லம் - 100 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 100 கிராம்
4. எள் - 1 மேசைக்கரண்டி
5. ஏலக்காய் - 5 எண்ணம்
6. நெய் - 1 மேஜைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு மிதமான தீயில் வறுத்துத் தனியாக வைக்கவும்.
2. ஏலக்காயைப் பொடித்துத் தூளாக்கி வைக்கவும்.
3. வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
4. அச்சு வெல்லத்தை 100 மில்லி தண்ணீர் ஊற்றிப் பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், வறுத்த எள், ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
6. உருட்டி வைத்துள்ள மாவை நீளவாக்கில் கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
7. பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.