சாமை பிடி கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சாமை அரிசி - 2 கோப்பை
2. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
3. கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. கல் உப்பு - 1 மேசைக்கரண்டி
8. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
9. இஞ்சி - 1 பெரிய துண்டு
10. தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் சீரகம் சேர்த்து வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் 4 கோப்பை தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. நன்கு கொதித்த உடன் ஊற வைத்த சாமை அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்.
6. மாவைப் பிடி கொழுக்கட்டையாகப் பிடித்து, இட்லிச் சட்டியில் வேக வைக்கவும்.
குறிப்பு:
தேங்காய்ச் சட்னி அல்லது காரச் சட்னி வைத்துச் சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.