கேழ்வரகுக் கொழுக்கட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 1 கோப்பை
2. கோதுமை மாவு - 1 கோப்பை
3. ஒரு கப் தேங்காய்த் துருவல் - 1 கோப்பை
4. பொட்டுக்கடலை மாவு - 1/2 கோப்பை
5. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
6. நாட்டுச் சர்க்கரை - 1/4 கோப்பை
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய் பொடி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம்.
2. அடி கனமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3. மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து அகில் சுடுநீரைச் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
4. பின்னர் அந்த மாவை உருண்டைகளாக்கி கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை வைத்து மூடி, மேற்பகுதியினைச் சமப்படுத்திக் கொள்ளவும்.
5. பூரணம் வைத்த கொழுக்கட்டைகளை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.