சிவப்பரிசி பிடி கொழுக்கட்டை
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. சிவப்பரிசி - 1 கோப்பை
2. வெல்லம் - 1 1/2 கோப்பை
3. தேங்காய்த் துருவல் - 1 கோப்பை
4. சிவப்பு அவல் - 100 கிராம்
5. நெய் - 2 மேசைக்கரண்டி
6. கருப்பு எள் - 1 கரண்டி
7. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சிவப்பு அரிசியை ஆறு மணி நேரம் வரை ஊற விடவும்.
2. ஊறிய அரிசையைக் கழுவித் தண்ணீரை வடிகட்டி வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
3. அதனை அரவை ஆலையில் கொடுத்து மாவாக திரித்து வாங்கி, அதனை சல்லடையிலிட்டு சலித்து, வறுத்து எடுக்கவும்.
4. அவலை வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
5. எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
6. பின் முந்திரிப் பருப்பைச் சிறிது நெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
7. வறுத்த எள் மற்றும் முந்திரிப் பருப்பைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
8. வாணலியில் வெல்லம் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. வெல்லம் கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பின் மீண்டும் கொதிக்க விடவும்.
10. நன்றாகக் கொதித்ததும், அதில் சிவப்பரிசி மாவு, சிவப்பு அவல் பொடி, எள்ளு, முந்திரிப்பருப்புப் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
11. அதில் நெய் விட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும்.
12. ஆறிய மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை நன்கு அழுத்தித் தேவையான வடிவம் கொடுக்கவும்.
13. பின்னர் அதனை இட்லிச் சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.