அவல் கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை கெட்டி அவல் - 1 கோப்பை
2. பொடித்த வெல்லம் - 1/4 கோப்பை
3. ஏலக்காய்த் தூள் - 1/4 கோப்பை
4. தேங்காய்த் துருவல் -1 கோப்பை
செய்முறை:
1. முதலில் அவலை மிக்ஸி ஜாரில் போட்டு ரவை போன்று பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் பொடித்த அவலை, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து அரைமணி நேரம் வரை வைத்திருக்கவும்.
3. அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டுப் பாகு பதம் வர விடவும்.
5. பிசைந்து வைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள், வெல்லப்பாகு கலந்து நன்கு கிளறவும்.
6. அதன் பிறகு, மாவை நன்கு ஒரு சேரக் கலந்து கையால் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
7. உருட்டிய கொழுக்கட்டைகளை இட்லி சட்டியில் வைத்து, நன்கு வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.