பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 1 கோப்பை
2. பாசிப் பருப்பு - 1 கோப்பை
3. வெல்லம் - ஒரு கோப்பை
4. ஏலக்காய் - 3 எண்ணம்
5. எள் - ஒரு கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
2. அதன் பிறகு, அதனை அரைப் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தட்டித் தூளாக்கிப் போட்டு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.
4. சிறிது ஆறிய பின் அதை வடிகட்டிக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
6. அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, பொடியாக்கிய ஏலக்காய், தேங்காய்த் துருவல், எள்ளு, காய்ச்சிய வெல்லப்பாகு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
7. கலந்த மாவைக் கையில் எடுத்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
8. பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.