கம்பு கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கம்பு - 250 கிராம்
2. வெல்லம் - 200 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
4. ஏலக்காய் - 5 எண்ணம்
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் கம்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.
2. வறுத்த கம்பை மாவாக அரைக்கவும்.
3. கம்பு மாவு, தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
4. வெல்லத்தைத் தூளாக்கி, அத்துடன் தண்ணீர் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைக்கவும்.
5. அதில் வெல்லப்பாகை ஊற்றிக் கிளறவும்.
6. வெல்லப்பாகு கலந்த மாவு ஆறியபின், அதைக் கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
7. பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.