பார்லி கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பார்லி - 1 கப்
2. துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
8. பெருங்காயம் - 1 துண்டு
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. பார்லியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றுடன் மூன்று மிளகாய் வற்றல், தண்ணீர் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, இரண்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும்.
5. அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுதையும், தேவையான உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
6. தண்ணீர் கொதித்தவுடன் பார்லி ரவையை மெதுவாகத் தூவி கட்டி பிடித்து விடாமல் கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
7. கெட்டியாகக் கிளறிய மாவை ஆறிய பின்பு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
8. உருட்டி வைத்தவைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தேங்காய் சட்னி,தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.