எள்ளுப் பூரணம் கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு – 1 கப்
2. கறுப்பு எள் – 50 கிராம்
3. தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி
4. பொடித்த வெல்லம் – 1/2 கப்
5. நெய் – 1 தேக்கரண்டி
6. ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
7. எண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. வாணலியில் தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
2. கொதி வந்ததும் மிதமான தீயில் அரிசி மாவைப் போட்டுக் கட்டியாகி விடாமல் கிளறவும்.
3. மாவு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு இலேசாம வறுத்து எடுக்கவும்.
5. வறுத்த எள் ஆறியதும் அதைப் பொடித்து வைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூளுடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டவும்.
7. வெல்லக் கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்த் துருவல், நெய், எள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். இது எள்ளுப்பூரணமாகும்.
8. வேகவைத்த அரிசி மாவைக் கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் எள்ளுப் பூரணம் வைத்துக் கொழுக்கட்டையாகச் செய்துகொள்ளவும்.
9. கொழுக்கட்டைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.