திணைப் பணியாரம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. திணை அரிசி மாவு - 1 கோப்பை
2. நாட்டுச் சர்க்கரை - 1 1/4 கோப்பை
3. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
4. நெய் - 1/4 கோப்பை
செய்முறை:
1. திணை அரிசியை நன்கு கழுவி, காற்றில் ஆறவிட்டு எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மாவு போல் பொடித்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் காய்ந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து நன்கு பிசுக்கு பதம் வந்ததும் எடுத்து திணை மாவில் கலக்கவும்.
3. அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
4. மாவைப் பணியாரச் சட்டியில் ஊற்றி வெந்ததும், திருப்பிப் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.