ராகி ரவைக் குழிப் பணியாரம்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ராகி ரவை - 1 கோப்பை
2. கோதுமை மாவு - 1/4 கோப்பை
3. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
4. வெல்லம் - 3/4 கோப்பை
5. நெய் - 1 மேசைக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. சோடா உப்பு - 1 சிட்டிகை
8. ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் ராகி ரவையை தண்ணீர் ஊற்றிக் கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
2. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்தது,, அதில் முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல் இரண்டையும் வறுக்கவும்.
3. ஒரு கிண்ணத்தில் வெல்லம் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும்.
4. ராகி ரவையுடன் வெல்லக் கரைசலைச் சேர்க்கவும்.
5. அதனுடன் ஏலக்காய்த் தூள், கோதுமை மாவு, உப்பு, சோடா உப்பு, வறுத்த முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
6. மாவைப் பணியாரச் சட்டியில் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.