கேழ்வரகுப் பணியாரம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கப்
2. உளுந்து மாவு - 1/4 கப்
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. கடலைப்பருப்பு - 1/2
5. தேங்காய் - 1/2 மூடி
6. மல்லித்தழை - சிறிது
7. கறிவேப்பிலை - சிறிது
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், உளுந்து மாவையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துகொள்ளுங்கள்.
3. அடுப்பில் வாணலியை வைத்து தீயை மிதமாக்கி, எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழையைச் சேர்த்துத் தாளிக்கவும்.
4. பிறகு தேங்காய்த் துண்டுகளை சேர்த்து புரட்டி தாளித்தவற்றை மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
5. அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6. பனியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் லேசாக எண்ணெய் விட்டுச் சூடானதும், மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: தக்காளிச் சட்னி சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.