பால் பணியாரம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. உளுந்து - 1 கப்
3. பால் - 1 லிட்டர்
4. சர்க்கரை - 1 கப்
5. ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. எண் ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும்.
2. மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
3. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மிதமான நெருப்பில் மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெய்யை வடியவிடவும்.
4. அதைக் குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.
5. பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
6. பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.