சோளப் பணியாரம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுச் சோளம் - 2 கோப்பை
2. இட்லி அரிசி - 2 கோப்பை
3. உருட்டு உளுத்தம்பருப்பு - 50 கிராம்
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 100 கிராம்
7. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது - 1 எண்ணம்
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. மல்லித்தழை (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
10. கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
11. எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை:
1. இட்லி அரிசி, சோளம் சேர்த்துக் குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறியவற்றை நன்கு கழுவி கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
3. அதனுடன் 1/2 மணி நேரம் ஊற வைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் அரைத்து சோளமாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
4. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மல்லித்தழை சேர்த்து வதக்கி மாவில் கலந்து கொள்ளவும்.
5. பணியாரச் சட்டியில் மாவை ஊற்றிச் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:
1. சோள மாவுப் பணியாரத்துக்கு தேங்காய்ச் சட்னி சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.