அவல் குழிப் பணியாரம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1 கோப்பை
2. ரவை - 1/2. கோப்பை
3. தயிர் - 1/4 கோப்பை
4. வெங்காயம் - 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிதளவு
10. மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
1. அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல், ரவை, தயிர், உப்பு சேர்த்து அரைக்கவும்.
2. அரைத்த மாவில் சோடா உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
3. அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
4. பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.