பயறு சுண்டல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சுண்டல் பயறு - 500 கிராம் ( பாசிப்பயறு, தட்டாம் பயறு, கடலைப்பருப்பு)
2. பல்லாரி வெங்காயம் - 50 கிராம்
3. வெங்காயம் - 100 கிராம்(நறுக்கியது)
4. உப்பு - தேவையான அளவு
5. பச்சை மிளகாய் அல்லது வற்றல் - தேவையான அளவு
6. தேங்காய் துருவியது - ஒரு கப்
7. கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1.சுண்டல் பயறுவை இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து வேக வைக்கவும்.
2. வேக வைத்த பயறை தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து வதக்கவும்.
4. தாளித்த பொருட்களை வேக வைத்த சுண்டலில் போட்டு கிளறி தேங்காய்ப் பூ போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.