மசாலா பொரி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பொரி - 1 லிட்டர்
2. மல்லித்தழை (நறுக்கியது) - 1/2 கப்
3. புதினா (நறுக்கியது) - 1/4 கப்
4. கறிவேப்பிலை - சிறிது
5. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
6. மாங்காய் (சிறியது) - 1 எண்ணம்
7. மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
9. எலுமிச்சை பழம் - பாதி
10. உப்பு - சிறிது.
செய்முறை:
1. மாங்காயைச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், மாங்காய் போன்றவற்றை பொரியுடன் சேர்த்துக் கிளறவும்.
4. அதனுடன் உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவி நன்றாகக் கிளறவும்.
5. கடைசியாக அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.