கொண்டக்கடலை சுண்டல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கொண்டக்கடலை- 2 கப்
2. சாம்பார் தூள்- 1 தேக்கரண்டி
3. உப்பு- தேவையான அளவு
தாளிக்க
4. எண்ணெய்- 1 தேக்கரண்டி
5. கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
6. உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
7. மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
8. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
9. இஞ்சி – 1 துண்டு
10. கறிவேப்பிலை - 1 சிறிது
11. பெருங்காயம் - சிறிது.
செய்முறை:
1. கொண்டக்கடலையை முதல் நாள் இரவில் ஊற வைத்து விடவும். மறுநாள் அந்தத் தண்ணீரை வடித்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கொண்டைக்கடலையுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிசப்பொருட்கள் அனைத்தையும் சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.
4. தாளிசத்துடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
5. சுண்டல் ஒன்று சேர்ந்ததும் சாம்பார் தூளைச் சேர்த்துச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
6. இறக்கி வைத்த சுண்டலுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.