மசாலாப் பொரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பொரி - 1கப்
2. கேரட் துருவல் - 1 தேக்கரண்டி
3. வெங்காயம் - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
4. வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
5. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
6. கலவை மிக்சர் - 1 தேக்கரண்டி
7. கரம்மசாலாத்தூள் -1 சிட்டிகை
8. மல்லித்தூள் -1சிட்டிகை
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பொறியைப் போட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
2. அதன் பின்பு அதனுடன் வேர்க்கடலை, மிக்சர், தேங்காய் எண்ணெய், உப்பு, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைக் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.