நிலக்கடலை சுண்டல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நிலக்கடலை -1 கப்
2. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
3. பெரிய வெங்காயம் -1 எண்ணம்
4. இஞ்சி -1 சிறிய துண்டு
5. மல்லித்தழை - சிறிது
6. பச்சை மிளகாய் -1 எண்ணம்
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கேரட்டைத் துருவிக் கொள்ளவும்.
2. வெங்காயம், மிளகாய், இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. நிலைக்கடலையை தண்ணீர், உப்பு சேர்த்துக் குக்கரில் 2 விசில் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
4. வேகவைத்ட்த கடலையுடன் நறுக்கி வைத்த பொருட்கள் சேர்த்து கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.