இந்தியக் கொடி - சுண்டல்
முனைவர் பி. ஆர். லட்சுமி
தேவையான பொருட்கள்:
ஊற வைத்த பயிறு-வகைகள்
1. சிவப்பு காராமணி 200 கிராம்
2. சோயாபீன்ஸ் 200 கிராம்
3. பச்சை பயிறு 200 கிராம்
அலங்காரத்திற்கு
4. கேரட்துருவல்,-பொடியாக நறுக்கியது
5. தேங்காய் துருவல்-வெள்ளையாக
6. கொத்துமல்லி தழை
கொடி கம்பத்திற்கு
7. கேரட் துருவல்,பொடியாக அறுத்த வெங்காயம், செவ்விளநீர் - ஒன்று
8. ஜெம்ஸ் மிட்டாய்
9. நீல கலர் ஒன்று - சக்கரத்திற்கு
10. தேன் - சிறிது
செய்முறை:
1. ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடுப்பில் நீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவேண்டும்.
2. பின்னர் நன்றாக வெந்தபின் சிவப்புக் காராமணிக்கு இளநீர் ஊற்றிக் கிண்டி இறக்க வேண்டும்.
3. தட்டில் ஊற்றும் போது சிறிது தேன் ஊற்றி இறக்கவேண்டும்.
4. வெள்ளை சோயாபீன்சையும் தனியாக வேகவைத்த பின் கிண்டி இறக்கவேண்டும். ஆறியபின் எலுமிச்சை சாறு, இளநீர் விட்டு இறக்க வேண்டும்.
5. தேங்காய்த் துருவலைத் தூவி விடவேண்டும்.
6. பச்சைபயிறு, ஒரு பச்சைமிளகாய் இவற்றைச் சேர்த்து வேக வைத்து இறக்கவேண்டும். ஆறிய பின் இளநீர் சேர்த்து இறக்க வேண்டும்.
7. தட்டில் சோயாபீன்ஸ் சுண்டலை நடுவில் வைத்து ஜெம்சை வைக்கவும்.
8. சிவப்பு காராமணி மேலே பச்சை காராமணி கீழே வருமாறு வைத்து அலங்காரம் செய்யவும்.
9. கொடிக்கம்பத்திற்குச் சுவைக்காக வெங்காயம், இவற்றை இணைக்கவும்.
“சுவையான இந்தியக்கொடி செவ்விளநீர் சுண்டல் தயார்”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.