தேங்காய் - மாங்காய் - சுண்டல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1 எண்ணம்
2. பட்டாணி - 200 கிராம்
3. தேங்காய் - பாதி
4. வெங்காயம் - 50 கிராம்
5. மிளகாய் - 3 எண்ணம்
6. இஞ்சி - சிறிது
7. நல்லெண்ணெய் - சிறிது
8. கடுகு, உளுந்து - தேவையான அளவு
9. பெருங்காயத்தூள் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. பட்டாணியை வேக வைத்து இறக்கி வைக்கவும்.
3. தேங்காயைப் பூவாகத் துருவிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் , இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. அத்துடன் மாங்காய், உப்புத்தூள் சேர்த்துக் கிளறி சுண்டல், தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.