தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சோயா பீன்ஸ் - 1 கப்
2. தக்காளிச் சாறு - 1/4 கப்
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1/4 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை - சிறிது
6. புதினா - சிறிது
7. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சோயா பீன்ஸை 10 மணி நேரம் ஊற வைத்துப் பிறகு குக்கரில் வேக விடவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, புதினா தாளிக்கவும்.
3. அதனுடன் தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
4. இதில் வெந்த பீன்ஸ், உப்பு சேர்க்கவும்.
5. நன்கு கலந்து வந்ததும் மேலாகத் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.