ஸ்வீட் கார்ன் சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. ஸ்வீட் கார்ன் - 1 கப்
2. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
3. புதினா - சிறிது
4. மல்லித்தழை - சிறிது
5. சோம்பு - 1/4 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஸ்வீட் கார்னை வேக வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, கீறிய பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர் அதனுடன் வேகவைத்த ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும்.
4. கடைசியாக, மல்லித்தழை, புதினா, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.