மொச்சை சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மொச்சை - 1 கப்
2. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. தேங்காய்த் துருவல் - 3 மேசைகக்ரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
2. மறுநாள் குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்துக் கிளறவும்.
5. கடைசியாகத் தேங்காய் துருவல் தூவிக் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.