உலர்பழச் சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்
2. பாதாம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
3. முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. பிஸ்தா - 1 மேசைக்கரண்டி
5. உலர் திராட்சை - 1 மேசைக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. பேரீச்சை - 10 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முளைகட்டிய பாசிப்பயறை உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, ஆவியில் வேக வைக்கவும்.
2. வெந்த பயறுடன் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, நறுக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. தேங்காய் துருவல் தூவி அலங்கரிக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.