வெஜ் சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முளைகட்டிய பயறு - 1 கப்
2. கேரட் - 1 எண்ணம்
3. வெள்ளரித் துண்டுகள் - 1/4 கப்
4. உருளைகிழங்கு - 150 கிராம்
5. தக்காளி - ஒன்று
6. பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
3. தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. முளை கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, காய்கறிகளை சேர்த்துக் கலக்கவும்.
6. அதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.