கொண்டைக்கடலை மாங்காய் சுண்டல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக்கடலை -1 கப்
2. மாங்காய்- 1 எண்ணம்
3. மிளகாய்-1 எண்ணம்
4. எலுமிச்சம்பழம் -1 எண்ணம்
5. உப்பு - தேவையான அளவு
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி
8. பெருங்காயத் தூள்-1/4 தேக்கரண்டி
9. வத்தல்-1 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவில் ஊறவைத்து மறு நாள் காலையில் அதை வேக வைக்கவும்.
2. மாங்காயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வாணலியைச் சூடாக்கி அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வத்தை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்திற்குப் பின்பு வேக வைத்து எடுத்த கொண்டைக் கடலையைச் சேர்க்க வேண்டும்.
5. பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.
6. எல்லாம் சேர்த்து நன்றாகக் கலந்த பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிய வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.